Thirukalukundram.in

 • Thirukalukundram Temple 01
 • Thirukalukundram temple 02
 • Thirukalukundram temple 03
 • Thirukalukundram temple 04
 • Thirukalukundram temple 05
 • Thirukalukundram Temple 07
 • thirukalukundram Temple 08
 • Thirukalukundram temple 09
 • thirukalukundram Temple 10
 • thirukalukundram Temple 11
 • thirukalukundram Temple 12
 • thirukalukundram Temple 13
 • slideshow html code
 • thirukalukundram Temple 15
Thirukalukundram Temple 011 Thirukalukundram temple 022 Thirukalukundram temple 033 Thirukalukundram temple 044 Thirukalukundram temple 055 Thirukalukundram Temple 076 thirukalukundram Temple 087 Thirukalukundram temple 098 thirukalukundram Temple 109 thirukalukundram Temple 1110 thirukalukundram Temple 1211 thirukalukundram Temple 1312 thirukalukundram Temple 1413 thirukalukundram Temple 1514
image carousel by WOWSlider.com v8.8
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - சங்கு தீர்த்தம்

சங்கடங்கள் தீர்க்கும் சங்கு தீர்த்த குளம்

சங்கு தீர்த்தம் (sangutheertham )ஆழ்ந்தகன்றதாகவும் மழை வளம் குறைந்த காலத்தும் வற்றாத நீரூற்றை உடையதாகவும் உள்ளது.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர்.

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது எனவே ஈசனை நோக்கி தவம் இருக்க ஈசன் அவரிடம் முட்டாளாக நீண்ட காலம் வாழும் மகன் வேண்டுமா? அல்லது புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா ? என வினவ புத்தியோடு உள்ள குழந்தையை வேண்டினார் . எனவே மார்கண்டேயர் markanteyar 16 வயது ஆயுளோடு பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார் . பதினாறு வயது வந்தடைந்த மார்கண்டேயர்markanteyar சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்தார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வந்தனர். மார்கண்டேயர் உயிரை பறிக்க முடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா வாகனம் மீது வந்தார். மார்கண்டேயர் உயிரை வாங்க பாசக் கயிற்றினை வீசினார். என்ன ஆச்சரியம்! உக்கிரமூர்த்தியாக சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைத்தார். என்றும் பதினாறுவயதுடன் சீரஞ்சீவியாக மார்கண்டேயன் markanteyar வாழ அம்பலத்தரசர் அருள்பாலித்தார். பிறகு மார்கண்டேயர் பல ஸ்தலங்களுக்கு சென்று வழிப்பட்டார்

ஒருமுறை திருக்கழுகுன்றத்திற்கு Thirukalukundram வந்தார். அப்போது அங்கு உள்ள குளத்தில்(sangutheertham ) நீராடி சிவனுக்கு அபிசேகம்(abishakam) செய்ய தண்ணீர் எடுத்து செல்ல பாத்திரம் இல்லாமல் ஈசனை வேண்டினார். பரம்பொருளின் அருளினால் பெரியதொரு வலம்புரிச் சங்கு(Sangu) இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்கண்டேயர் markanteyar, அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூசித்தார். எனவே அக்குளத்திற்கு சங்கு தீர்த்தம் (sangutheertham ) என்று பெயர். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்குதீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு Sangu தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது. அந்த குளத்தில்(sangutheertham ) இன்று வரை சங்கு(sangu) பிறக்கிறது. மேலும் சங்கு பிறப்பதற்கு முன்னாள் குளம்(sangutheertham ) முழுவதும் நுரை கிளம்புவதை காணலாம் . கடைசியாக 1-9-2011 அன்று சங்கு பிறந்தது.

சங்காபிஷேகம்

      Thirukalukundram-Sangutheertham

திருக்கழுக்குன்றம் திருமலையில்(Thirumalai)ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) கடைசி திங்கள் கிழமையில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம்(sangu abishakam) நடைபெறும். அங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும். சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து (sangu-theertham) கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

தீர்த்த விசேஷம் - கங்கை நதிகள் சங்குத்தீர்த்தத்தில் நீராடுதல்

கங்கை நதி, காளிந்தி நதி, சரசுவதி நதி, வைதாளி நதி, கவுதமை நதி, கம்பை நதி, பினாகி நதி, பம்பை நதி, கோமுகை நதி, பொன்முகரி நதி, தென்குமரி நதி, தேவிகை நதி, சிங்கை நதி, கன்டகி நதி, வேந்திரவதி நதி, பிராமி நதி, பாலி நதி, பொருனை நதி, சோல நதி, சிந்து நதி, சோம நதி, அம்பை நதி, இந்திரபுரி நதி, காவேரி நதி, உருத்திர நதி, சரயு நதி, வைகை நதி, மணிமுத்தா நதி முதலாயிருக்கும் பெரிய தேவ நதிகள் எல்லாம் கடலுக்கு இறைவனாகிய வருனனை அனுகித் தங்களை அனையுமாறு அவனை வேண்டினர். அவன் தன்னை அனையும் நாள் இந்த நாள் எனக்கெனக் முறைமாறி நின்று ஒருவருக்கொருவர் கோபித்து நின்றார்கள். வருணன் அவர்கள் மாறுபாட்டை கண்டு அச்சங்கொண்டு தாம் அனைவரையும் அலைகளாகிய கரங்களால் அணைத்து அன்பு செலுத்திவந்தும் மாறுபட்ட காரணம் யாதென வினவ கங்கை முதலிய நதிகள் தங்கள் பெருமையை கூறித்தாமே சிறந்தவள், தம்மையே ஏற்றுக்கொள்ளவெண்டும் என்று வாதிட்டதால் வருணனை கோபித்து உங்களை காட்டிலும்ம் பெருமை மிக்க தீர்த்தங்கள் உலகில் உள்ளன. கோதாவரி என்று ஒரு தீர்த்தமுண்டு. அத்தீர்த்தத்தில் சுயம்பு வடிவாக சிவலிங்கமுண்டு. அதன் பெருமை சிறந்தது என்று கூறியும் அந்த நதிகள் கோபம் நீங்காமையின் அந்த நதிகளுடன் கோதாவரி நதிக்கரையில் கோடீஸ்வரரின் கோயிலை அடைந்து இறைவனை பணிந்து துதிக்க முறையிட்டான்.

                        Thirukalukundram-Sangutheertham

கோடிஸ்வர லிங்கத்தில் அருள் கொண்டிருக்கும் சிவபெருமான் வருணனை நோக்கி நீ மனம் வாடி வருந்தாதே என்று தேற்றி அந்த நதிகளை பார்தது நீங்கள் உங்களுக்குள் யார் பெரியவள்! என்று பெண் புத்தியில் கூடிய வழக்குடன் வந்தீர்கள். உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது? நம்முடைய உருத்திரக்கோடியில் குளிர்ச்சி பொருந்திய அனேக தீர்த்தங்கள் உள்ளன. அந்த தீர்த்தங்களில் வீசுகின்ற தூய்மையான வெண்மை நிறமுள்ள ஒரு துளியினுடைய நூற்றிலொன்றுக்கும் உங்கள் பெருமை போதாது. அந்த தீர்த்தங்களில் தேவர்களும், முனிவர்களும் தங்கள் பாவங்களை தீர்ப்பார்கள் கன்னிராசியில் குரு பிரவேசிக்கும் சிறந்த நாள் இன்று; ஆகையால் இன்று நாம் அங்கு எழுந்தருளுகிறோம். நீங்களும் வாருங்கள் என்று சிவபெருமான் எழுந்தருளினார். வருணனும் நதிகளும் விரைந்து உருத்திரக்கோடி(ruthirakodi) தலத்தை அடைந்தனர். பரமசிவம் எழுந்தருளி அங்கிருக்கும் பல தீர்த்தங்களை காட்ட, அந்த நதிகள் சங்கு தீர்த்தம்(sangu Theertham) முதலான தீர்தங்களில் மூழ்கி, சங்கு தீர்த்த்தில் தங்கி இருந்து தங்கள் பாவங்களை நீங்கி, மனத்தில் இருந்த பொறாமை மாறி பணிந்து தங்கள் இடங்களுக்கு போய் சேர்ந்தனர்.

மலையை சுற்றி அமைந்த 14 தீர்த்தங்கள்

S.No தீர்த்தம்.
1. இந்திர தீர்த்தம்.
2. சம்பு தீர்த்தம்.
3. உத்திர தீர்த்தம்.
4. வசிட்ட தீர்த்தம்.
5. சங்கு தீர்த்தம்.
6. மெய்ஞான தீர்த்தம்.
7. அகத்திய தீர்த்தம்.
8. மார்க்கண்ட தீர்த்தம்.
9. கோசிக தீர்த்தம்.
10. நந்தி தீர்த்தம்.
11. வருண தீர்த்தம்.
12. அகலிகை தீர்த்தம்.
13. பட்சி தீர்த்தம்.
14. இலட்சுமி தீர்த்தம்.


Thirukalukundram Temple