Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in


Naalvar Temple,Naalvar Koyil pet,Thirukazhukundram
அருள்மிகு நால்வர் திருக்கோவில், நால்வர் கோயில்பேட்டை, திருக்கழுக்குன்றம்



Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple


திருஞானசம்பந்தர்



திருஞானசம்பந்தர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவை பாம்பு தீண்டி இறக்க, அவளது எலும்பைக் குடத்தில் சேமித்து வைத்தார் சிவநேசர். அதனை அறிந்த ஞானசம்பந்தர் திருக்கோயில் முன் அக்குடத்தை கொணர்வித்து “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.சமயக்குரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற இத் திருக்கழுக்குன்றம் தலத்தில், ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசைவிழா, வைகாசி மாதம் மூல நட்சத்திர திருநாளில், நடைபெறுவது வழக்கம்.


திருஞானசம்பந்தர் இசைவிழா



மாணிக்கவாசகர்



மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன.


மாணிக்கவாசகர் விழா ஆனி மகம்







சிவ பெருமான் மாணிக்கவாசகருக்கு அருளிய திருக்காட்சி


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

திருப் பெருந்துறையில் சிவ பெருமான் மாணிக்கவாசகருக்கு குரு வடிவில் இருந்து அருளிய திருக்காட்சி குரு தரிசனம், மீண்டும் திருக்கழுக்குன்றத்தில் அடிகளுக்கு காட்டி அருளல்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

திருப்பெருந்துறையில், சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவில் மாணிக்கவாசகரை ஆட் கொண்டு, அடிகளுக்கு திருவடி தீக்கை செய்வித்து அருளல்







மாணிக்கவாசகர் பொன் ஊஞ்சல் விழா - குருபூசை



திருநாவுக்கரசு நாயனார்



அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்


திருநாவுக்கரர் விழா





சுந்தரமூர்த்தி நாயனார்



சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[1] இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.[1] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன.


சுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, தாழக்கோயில், திருக்கழுக்குன்றம்