• Arulmigu Bakthavachaleswarar Temple
 • Arulmigu Bakthavachaleswarar Temple-1
 • Arulmigu Bakthavachaleswarar Temple-2
 • Arulmigu Bakthavachaleswarar Temple-3
 • Arulmigu Bakthavachaleswarar Temple-4
 • Arulmigu Bakthavachaleswarar Temple-5
 • Arulmigu Vedhagiriswarar Temple
 • Arulmigu Vedhagiriswarar Temple-1
 • Arulmigu Vedhagiriswarar Temple-2
 • Arulmigu Vedhagiriswarar
 • jquery gallery
 • Thirukalukundram temple 01
Arulmigu Bakthavachaleswarar Temple1 Arulmigu Bakthavachaleswarar Temple-12 Arulmigu Bakthavachaleswarar Temple-23 Arulmigu Bakthavachaleswarar Temple-34 Arulmigu Bakthavachaleswarar Temple-45 Arulmigu Bakthavachaleswarar Temple-56 Arulmigu Vedhagiriswarar Temple7 Arulmigu Vedhagiriswarar Temple-18 Arulmigu Vedhagiriswarar Temple-29 Arulmigu Vedhagiriswarar10 Arulmigu Vedhagiriswarar-111 Thirukalukundram temple 0112

ARULMIGU THIRIMALAI CHOKKAAMMAN TEMPLE-THIRUKALUKUNDRAM
அருள்மிகு திருமலை சொக்கம்மன் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம்

அருள்மிகு திருமலை சொக்கம்மன் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம்

                       

புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு தரும் திருமலை சொக்கம்மன்

சுந்தரி நிரந்தரி சவுந்தரி
அனாத ராட்சசியுமாகி
அண்ட முக்கோடியும் பெற்ற மாதாவுமா
யகிலமிசை அண்டர் போற்ற
சந்தமுறு சாமுண்டி சண்டிகை மாகாளியாய்
சாமளா தேவியுமாய்
சப்த பரிபூரனி ரூபரச கந்தமாய்
சாஸ்திர ஞானேந்திரமதாய்


சொந்த நீலாட்ச்சி காமாட்ச்சி மீனாட்ச்சியாய்
துனை செய்யும் அம்பாட்ச்சியாய்
சொர்ணமலர் கமலட்சிஆட்சி விசாலட்சியாய்
துல்லிய சொருபாட்சியாய்
நந்தி பவழாட்ச்சியாய்க் கழுக்குன்றிலமர் தோங்கும்
நான் மறைகளோதுமு மையாய்
நாடினோர்கருள் புரியும் நகர் திருமலைச்
நாயகியம்மையுமையே.........

புண்ணிய பூமியாகிய இப்பாரத கண்டத்தில் திருப்பாற் கடற்கரை ஓரங்களில் முடி மன்னர்களால் ஆண்ட நகரங்களில் ஒன்றாகிய பல வளங்களும் நிறைந்த சதுரங்கப்பட்டினம் எனும் ஊரில் வணிகர் குல திலகரும், சீறும் சிறப்பும், செல்வமும் சிறந்து விளங்கி இல்லற தருமம் தவறாது செய்து வந்த வரும் கோதில் குணங்களமைந்த பதி பக்தி மாறாத கற்புக்கரசியான மங்கயற்கரசி என்னும் திருநாமம் கொண்ட கற்புக்கரசியை பத்தினியாக உடைய தனக்கோட்டி செட்டியார் எனும் வணிகர் கோமான் அநேக தான தருமங்களைச் செய்தும் ஸ்தல தீர்த்த யாத்திரைகளை செய்தும் புத்திர பேரு இல்லாத குறையால் தானும் தன் பத்தினியாரும் மனக்கவலை அடைந்து வருந்தியிருந்தனர்.

வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருவம் கொண்டு தமது இல்லம் வரக்கண்ட வணிகர் தன் பத்தினியோடு எதிர் கொண்டு அவரை அழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமர செய்தார். வேதகிரி இங்கெழுந்தருளியது பல ஜென்மங்களில் செய்த தவ பயனே ஆகுமென்று வணங்கி சுவாமிகள் திருவடி கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்திட்டு நறு மலர்களால் அர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியேன் எங்கள் குறை தவிர்த்து ஆட்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த்து வேண்டி நிற்க பெருமான் மனம் இறங்கி நீவீர் மேற்கே அடுத்துள்ள வேதகிரியை ஒரு மண்டலம் விதிப்படி பிரதஷனம் செய்து வர புத்திர பேரு உண்டாகுமென திருவாய் மலர்ந்து மறைந்தார்.

அவ்வன்னமே வேதகிரியை இருவரும் வேத விதிப்படி ஒரு மண்டலம் பிரதஷனம் செய்து முடிவில் வேதகிரி பெருமானுக்கும், திருபுரசுந்தரியம்மைக்கும் விசேஷ அபிஷேக அலங்காரம் செய்து வைத்து அடியார்கட்கு அமுதூட்டி தமது இல்லம் சேர்ந்து துயில் எழுந்து பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம் பக்கத்தில் இருக்கக் கண்டு கறையில்லா ஆனந்தம் பொங்கி இரு கரங்களில் ஏந்தி உச்சி மோந்து மார்புற தழுவுங்காலை ஆனந்தம் பொங்க இரு தனங்களிலும் பால் சுரக்க அம்மைக்கு பால் குடுத்தனர். அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் “சொக்கம்மாள்” என அசரீயாய் ஒலித்தது. அப்பெயரை கேட்ட அனைவரும் பரமானந்தம கொண்டனர்.

திருமலையை வலம் வந்த காரணத்தினால் வந்த செல்வமாதலால் “திருமலைச் சொக்கம்மாள்”(Thirumalai chokkamman) என்னும் திருநாமம் சூட்டி மூன்று முறை அழைத்தனர்.பின்னர் அன்னதானம், சொர்னதானம் முதலிய 32 தானங்களும் அவரவர் விரும்பியபடி வேண்டும் அளவிற்கு கொடுத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தார்கள். அப்படி வளர்ந்த தங்களுடன் உள்ள முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமனம் முடிக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கும் சமயம் தேவியாருக்கு பூர்வக்கியானம் வந்து தந்தையாரை நோக்கி அப்பா! வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.

உடனே வணிகர்கோன் “திருமலை சொக்கமாள் “ (Thirumalai chokkamman) என்னும் திருத்தேவியை அழைத்துக்கொண்டு “திருக்கழுகுன்றம்” என்னும் திவ்ய ஷேத்திரம் அடைந்து திவ்ய தீர்த்தமாகிய சங்குத்தீர்த்ததில் நீராடி வேதமலையை வலம் வரும் போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாகிய மலைக்கு வடக்கு திசையில் செல்லும் போது ஒருபாறை மீது வேதகிரி பெருமான் அமர்ந்து இருப்பது அம்மையாருக்கு மட்டும் தோன்ற அம்மையார் அடையும் இடம் வந்ததை உனர்ந்து பெருமானிடம் நெருந்கி பூமியைக் கிளறி நிற்க வேதகிரிபெருமான் தேவியை அழைத்துக் கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்; முன்னே சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையைக் கானாது திகைத்து மயங்கி முன்னும் பின்னுமாக ஓடி ஒடி தேடியும் கானமையால் ஓவெனக்! கதறிய வண்ணமாக ”திருமலைச் சொக்கம்மாள்” (Thirumalai chokkamman) என்று பலமுறை கூவியழைக்க மலை மீது ஏன்! ஏன்! என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறிப் பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னுமாக நிற்பதறிந்து ஓ வெனக் கதறிய வண்னம் மெய் சோர்ந்து அடியற்ற மரம் போல சுவாமி திருபாதத்தில் விழுந்து கதற பெருமான் ஏ அன்ப வருந்த வேண்டாம். நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள். இனி உம்முடன் வர மாட்டாள். வேண்டிய வரம் கேள் தருவோம் என திருவாய் மலர்ந்தார்.

செட்டியார், சுவாமி தங்களை அடைந்ததும் அகில உலக தேவியே மகளாகப் பெற்றும நான் அடைந்ததை காட்டிலும் வேறு பேறு எனக்கு என்ன வேண்டும்.ஆயினும் இவ்விடத்திலெயே உம்மை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்கட்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் "என்று அவரவர் கோரியபடி வரத்தையும் அளித்தருள வேண்டுமென பிரார்த்தித்தார். சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார். பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.அக்கட்டளையை ஏற்று வேதமலை உச்சியில் சென்று பார்க்க,அங்கும் அம்மையாரோடு( Thirumalai chokkamman) காட்சி அளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! வேதகிரி பெருமானே! அம்மயாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டும் என பிரார்த்திக்க, பெருமான் அம்மையார் சன்னிதானத்திலேயே இருக்க மோட்சமளித்தார்.

வணிகர்கோன் விதேக முக்தி அடைந்தார். அவ்வம்மையாரை வளர்த்த தாயகிய மங்கையர்கரசியாருக்கும் பெருமான் சாயுச்சிய பதவியளித்தார். அந்த நாள் முதல் ஈசன் வேதகிரி பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி வேதமலையின் மேல் வடக்கு திசையில் அம்மையாரால் ஏற்பட்ட வரமாதலால் அம்மையார் பேரே விளங்க “திருமலை சொக்கம்மன்”(Thirumalai chokkamman) ஆலயம் என்றாக்கி இருவரும் அங்கெழுந்தருளியிருந்து மெய்யன்போடு தம்மை வந்து அடைந்த அன்பர்களுக்கு “புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் போன்ற பேறுகள் கொடுக்கப்பெற்றவர்கள் தாமடைந்த வரத்தை முன்னிட்டு தொட்டில் பிள்ளை,மாலை சாத்துதல்,அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்கின்றனர்.

பெருமான் தேவியரை ஏற்றுக்கொண்ட சுப தினமான பங்குனி உத்திர சுபவேளையில் வருஷம் பிரதி வருஷம் சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேக திருக்கல்யான மஹோத்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்


நன்றி-திரு.வீ.ராஜேந்திரன் (அர்ச்சகர்)
அருள்மிகு திருமலை சொக்கம்மன் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம்