அருள்மிகு வட்டப்பாறை மேலமர்ந்த ஓம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம்
               

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டத்தில் ஸ்ரீ ருத்ரகோடிஸ்வரா் எழுந்தருளி உள்ள ருத்திரான் கோயிலில் வட்டபாறையின் மேல் அமர்ந்த அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மன்(Kali amman ) வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து சாந்த சொருபியாக காட்சியளிக்கிறாள்.

அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் முதல் தேதி சக்தி மாலை அனிந்து இரண்டு வேளையும் நீராடி அம்மனை வலம் வந்து வனங்கி விரதம் இருப்பர்.

அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் இரண்டாம் நாள் மாலை விளக்கு பூஜை சிறப்பாக நடை பெறும்.

அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் மூன்றாம் நாள் சங்கு தீர்த்த குளத்தில் இருந்து நன்னீர் எடுத்து மாட வீதியில் ஊர்வலமாக வந்து அருள்மிகு ஓம் ஸ்ரீ காளியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.