ARULMIGU THIRIPURASUNDARI AMMAN AND VEDHAGIRISWARAR TEMPLE-CHITHIRAI THIRUVIZHA THIRUKALUKUNDRAM
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா -திருக்கழுக்குன்றம்

THIRUVIZHAKKAL

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா
Arulmigu Vedhagiriswarar -Thiripurasundari Amman Chithirai Thiruvizha

திருவிழா நாள்-1         காலை பல்லக்கு

காலையில் கொடி ஏற்று நிகழ்ச்சி, பல்லக்கில் மலையடிவாரம் வந்து மாடவீதி வரும் இறைவன், இறைவி இரவில் புண்ணியக்கோடி விமானத்தில் வந்து அருள்புரிகிறார்.

       

திருவிழா நாள்-1         இரவு புன்னியகோடி விமானம்

     

திருவிழா நாள்-2 காலை பவழக்கால் சப்பரம் வாகனம்

       

திருவிழா நாள்-2 இரவு பூத வாகனம்

இரண்டாம்நாள்விழா: பூதவாகனத்தில் பவனி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற பஞ்சபூதங்களால்ஆனஉலகில், பஞ்சபூதங்களின் உருவமான உடலை பூதத்தை சிவன் அடக்கி அருளும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது.

     

திருவிழா நாள்-3 காலை அதிகார நந்தி வாகனம்

மூன்றாம்நாள்விழா: சிவனடியார்களின் பெருமையை உணர்த்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒருநிலையில் நின்று சிவனை தொழுது வணங்கி தொண்டு செய்து இறையருள் பெற்று சிவனடிபேரு எய்திய அடியார்கள் 63 நாயன்மார்களும் ஒன்பது தொகைஅடியார்களும் அதிகாரநந்தி மீது அமர்ந்து வரும் இறைவனை வணங்கிய படியேமலைவலம் வருவது அரிய தொருகாட்சி. ஆயிரக்கணக்கானஅடியார் பெருமக்களோடு மலைவலம் வந்து அருள் பெருகின்றனர்.

               

திருவிழா நாள்-3 இரவு சந்திர பிரபை வாகனம்

       

திருவிழா நாள்-4 காலை புருஷா மிருகம் வாகனம்

நான்காம் நாள் விழா: காலையில் புருஷான் மிருகவாகனம் மீது அமர்ந்து திருவீதி வலம் வரும் இறைவன் வலம்வருவார்.

               

திருவிழா நாள்-4 இரவு நாக வாகனம்

இறைவன் இரவில் நாகவாகனத்தில் வலம்வருவார். அப்பொழுது சுந்தரருக்கு பொன்கொடுத்துஅருளும் நிகழ்ச்சிநடைபெறுகிறது. இறைவனின் விழா திருமேனியில் வரமளிக்கும் உள்ளங்கையில் பொன்முடிப்பு இருப்பதை பக்தர்கள் காணலாம். இறைவனிடம் பொன்பெறகையில் கிண்ணத்தோடு நிற்கும் சுந்தரரின் திருவுருவம் நால்வர் கோவிலில் மூலவராகஅமைந்துள்ளது. இறைவனைபொன்னிட்டநாதர் என்றும், திருக்கழுக்குன்றத்துஉடையவார் பொன்னிட்டீசுவரமுடையநாயனார் என்றும் குறிப்பிடும் கல்வெட்டு திரிபுரசுந்தரி அம்மன் கருவறையில் காணலாம்.