• Arulmigu Bakthavachaleswarar Temple
  • Arulmigu Bakthavachaleswarar Temple-1
  • Arulmigu Bakthavachaleswarar Temple-2
  • Arulmigu Bakthavachaleswarar Temple-3
  • Arulmigu Bakthavachaleswarar Temple-4
  • Arulmigu Bakthavachaleswarar Temple-5
  • Arulmigu Vedhagiriswarar Temple
  • Arulmigu Vedhagiriswarar Temple-1
  • Arulmigu Vedhagiriswarar Temple-2
  • Arulmigu Vedhagiriswarar
  • jquery gallery
  • Thirukalukundram temple 01
Arulmigu Bakthavachaleswarar Temple1 Arulmigu Bakthavachaleswarar Temple-12 Arulmigu Bakthavachaleswarar Temple-23 Arulmigu Bakthavachaleswarar Temple-34 Arulmigu Bakthavachaleswarar Temple-45 Arulmigu Bakthavachaleswarar Temple-56 Arulmigu Vedhagiriswarar Temple7 Arulmigu Vedhagiriswarar Temple-18 Arulmigu Vedhagiriswarar Temple-29 Arulmigu Vedhagiriswarar10 Arulmigu Vedhagiriswarar-111 Thirukalukundram temple 0112

ARULMIGU THIRIPURASUNDARI AMMAN AND VEDHAGIRISWARAR TEMPLE-THIRUKALUKUNDRAM
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் தொண்டுகள்
1. திருநீலகண்டர் சிவனடியார்களுக்கு திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்.
2. இயற்பகையார் இல்லையென்னாது எதையும் அளித்தவர்.தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
3. இளையான்குடிமாறர். வறுமையிலும், நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
4.மெய்பொருள் நாயனார் அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக கொண்டவர்.
5.விறன்மிண்ட நாயனார் தேவசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வனங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்
6.அமர்நீதி நாயனார் அடியார்க்கொடுத்த கோவணம் மறைந்ததற்காக ஈடு செய்ய தன் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பனம் செய்த வணிகர்.
7.எறிபத்த நாயனார் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
8.ஏனாதிநாத நாயனார் திருநீற்றின் பொலிவைக் கண்டு அதி சூரனைக் கொல்லாமல் தாமே இறந்தவர்
9.கண்ணப்ப நாயனார் சிவ பெருமானுக்கு தம் கண்களையும் கொடுத்த தேவர்.
10.குங்கிலயக் கலய நாயனார். நாள் தோறும் சிவபெறுமானுக்கு குங்கிலயத் தூபமிட்ட மறையவர்.
11.மானக்கஞ்சாற நாயனார். தம் மகளின் நீண்ட கூந்தலை சிவனடியாரின் பஞ்ச வடிவுக்காக அளித்த வேளாளர்.
12.அரிவாட்டய நாயனார். பூசைப் பொருட்கள் தவறித் தரையில் உள்ள நில வெடிப்பில் சிந்திமையால் தம் ஊட்டியை தாமே அறுக்க முனைந்த வேளாளர்
13.ஆனாய நாயனார். பஞ்சாட்சரத்தை வேய்குழலில் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
14.மூர்த்தி நாயனார். சந்தன கட்டை கிடைக்காத போது தம் முழக்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.
15.முருக நாயனார். மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பனியில் ஈடுபட்ட மறையவர்.
16.உருத்திர நாயனார். நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முக்தி அடைந்த மறையவர்.
17.திருநாளைப் போவார் நாயனார். தில்லையில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தி அடைந்தவர்.
18.திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். அடியார்களின் ஆடைகளின் அழுக்கு நீக்கி உதவியவர்.
19.சண்டேசுவர நாயனார். சிவபூசைக்குறிய பாற்குடங்களை உதைத்த தந்தையின் காலை வெட்டிய மறையவர்.
20.திருநாவுக்கரசு நாயனார். சைவமும்,தமிழும் தழைக்க தேவாரம் பாடியவர், புறச்சமய இருளை நீக்கிய வேளாளர்.
21.குலச்சிறை நாயனார். பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
22.பெருமிழலைக் குறும்ப நாயனார். சுந்தர மூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
23.காரைக்காலம்மையார். இறைவனருளால் இருமுறை மாய மாங்கனி பெற்றவர்.
24.அப்பூதியடிகள். திருஞாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்றவர் .
25.திரிநீலநக்க நாயனார். திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்
26.நமிநந்தியடிகள் நாயனார். சமணர்கள் எண்ணெய் தர மருத்தமையால் குளத்து நீரையே கொண்டு விளக்கு எரித்த மறையவர்.
27.திருஞானசம்பந்தர். ஞானப்பால் உண்டவர், தேவரம் பாடிச் சைவமும் தமிழும் தழைக்க செய்த மறையவர்.
28.ஏயர்கோன் கலிக்காம நாயனார். சுந்தரர் சிவபெருமானை தூது அனுப்பியதால் அவரை பகைத்துப் பின்னர் சூலை நோய் அடைந்து சுந்திரரின் தொடர்பை பெற்ற வேளாளர்.
29.திருமூல நாயனார். திருமந்த்திரம் பாடிய சித்தர்.
30.தண்டியடிகள் நாயனார். திருவாரூர்க் கமலாயக் குளத்தை பிறவிக் குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.
31.மூர்க்க நாயனார். சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்கட்கு அன்னதானம் செய்த வேளாளர்.
32.சோமாசி மாற நாயனார். சில வேள்விகள் புரி்ந்து சுந்தரரை வழிபட்டு சிவபதம் அடைந்த மறையவர்.
33.சாக்கிய நாயனார். நாள் தோறும் கற்களையே மலராக சிவ லிங்கத்தின் மீது ஏறிந்து தம் பக்தியை வெளிப்படுத்திய வேளாளார்.
34.சிறப்புலி நாயனார். திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியை சிவ பெருமனுக்கே தத்தம் செய்த மறையவர்.
35.சிறுத்தொண்ட நாயனார். இல்லை என்னாமல் பிள்ளைகறி சமைத்துச் சிவனடியாரை வழிபட்டவர்.
36.கழறிற்றறிவார் நாயனார். உமர்மன் பூசிய சலவைத் தொழிலாளனை சிவ வேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.
37.கணநாத நாயனார். திருஞானசம்பந்தரை வழிபட்டு திருக்கயிலையை அடைந்த மறையவர்.
38.கூற்றுவ நாயனார். நடராச பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.
39.புகழ்சோழ நாயனார். தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்து இருப்பதை அறிந்து மணம் நொந்து தீப்புகுந்தவர்.
40.நரசிங்க முனையரைய நாயனார். போலி சிவனடியார்களிடமும் அன்பு காட்டிய பெருந்தகையார்.
41.அதிபத்த நாயனார். நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப் படைத்த மீனவர்.
42.கலிக்கம்ப நாயனார். சிவவேடங்கொண்ட பணியாளரையும் வழிபட்டவர்.
43.கலிய நாயனார். எண்ணெயும் விறகும் இல்லாதபோது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து கோயிலில் ஒளியுண்டாக்கிய வானியர்.
44.சக்தி நாயனார். சிவனடியார்களை இகழ்ந்தவர். நாவை தடையம் என்னும் குறடுப்போலும் கருவியால் இழுத்து கத்தியால் அரிந்த வேளாளர்.
45.ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு சேத்திர திருவெண்பா என்னும் நூலை எழுதியவர்.
46.கணம்புல்ல நாயனார். கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபத்திருப்பணி புரிந்தவர்.நெய் இல்லததால் தலை முடியையே எரித்தவர்.
47.காரி நாயனார். காரிக்கோவை என்னும் நூல் இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ் பணி புரிந்தவர்.
48.நின்றசீர் நெடுமாற நாயனார். சமண சமையத்தவராக இருந்து திருஞானசம்பந்தரால் சைவ சமயத்துக்கு திறும்ப பெற்றவர்.
49.வாயிலார் நாயனார். சிவபெருமானுக்கு மனத்தினாலயே திருக்கோயில் அமைத்து திருமஞ்சனம் தூப தீபம் செய்த வேளாளர்.
50.முனையடுவார் நாயனார். கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்க்கு வழங்கிய வேளாளர்.
51.கழற்சிங்க நாயனார். பூ மண்டபத்தின் கிழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியரின் கையை வெட்டியவர்
52.செருத்துணை நாயனார். கழற்சிங்கரின் மனைவி பூ மண்டபத்தின் இருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கைஅறுத்த வேளாளர்.
53.இடங்கழி நாயனார். தம் செல்வத்தையும் அம்பாரத்தையும் சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்டு விட்ட குருநில மன்னர்.
54.புகழ்துணை நாயனார். சிவபெருமான் திருவருளால் பஞ்சத்தில் நாள் தோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.
55.கோட்டிபுலி நாயனார். சிவபெருமானுக்குப் படைப்பதற்காகத் தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தினரைக் கொன்று நேர்மையை நிலைனாட்டிய வேளாளர்.
56.பூசலார் நாயனார். மனக்கோயில் கட்டிச் சிவ பெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.
57.மங்கையர்க்கரசியார். நின்றசீர் நெடுமாறனாரின் மனைவியார்.திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவரக்கியவர்.
58.நேச நாயனார். சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.
59.கோச்செங்கட் சோழ நாயனார். திருவானைக்கா திருமதில் பணிகளை செய்தவர்.70 சிவன் கோயில்களை கட்டியவர்.
60.திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருஞான சம்பந்தரின் பாடல்களை யாழில் அமைத்து பாடியவர்.
61.சடைய நாயனார். சுந்தரரின் தந்தையார்.
62.இசை ஞானியர். சுந்தரரின் அன்னையார்.
63.சுந்தரமூர்த்தி நாயனார். சடையனார், இசை ஞானியர் ஆகியோரின் மைந்தர், சிவபெருமான் தோழர், தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.