Thirukalukundram.in

சேரமான் பெருமானுடன் கைலாயம் செல்லும் உற்சவ விழா

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர், இசைவிழா மாணிக்கவாசகர் உற்சவம், சுந்தரர்விழா, திருநாவுக்கரசர்விழா என நால்வருக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல் சைவக் குறவர் சுந்தரர் சுவாமிகளின் அவதார திருநாளான ஆடிசுவாதி நட்சத்திரத்தில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சுவாமி சன்னிதான வளாகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது நண்பரான சேரமான் பெருமானுடன் கைலாயம் செல்லும் உற்சவ விழா நடைபெற்றது. இதற்காக சந்திரசேகரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள், சுந்தரசுவாமிகள், சேரமான் பெருமான் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக, ஆராதனைகள் சிவாச்சாரியார்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுந்தரர் சுவாமிகள் மற்றும் சேரமான் ஒருபல்லக்கிலும், அருள்மிகு சந்திரசேகரர், திரிபுரசுந்தரி அம்பாள் ஒருபல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.